திருவனந்தபுரத்தில் நாளை (3.9.22) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறவுள்ள தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளாவிற்கு சென்றுள்ளார்.

 

 

'தென்மண்டல கவுன்சில் கூட்டம்' என்றழைக்கப்படும் இந்த கூட்டத்தில்

 கலந்து கொள்ள கேரள மாநிலம் சென்ற அவரும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் நேரில் சந்தித்து கொண்டனர்.

 

 

இந்த சந்திப்பின் போது 'தி திராவிடியன் மாடல்' என்ற புத்தகத்தை கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரிசளித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு முன்னர் வெறும் 'திராவிடம்' என்ற ஒற்றை வார்த்தை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது பலரையும் அதுபோல் ஒற்றை வார்த்தைகளை பதிவு செய்ய தூண்டியுள்ளது.

 

தமிழக பாஜக தலைவர் ' தமிழன்' எனவும் முன்னாள் தந்தி தொலைகாட்சி செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பான்டே 'மனிதன்'எனவும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கியது தென்மண்டல குழு என்பது குறிப்பிடத்தக்கது.