செப்டம்பர் 12ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

இதையொட்டி இங்கு கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் கல்லூரியின் மாணவர்கள் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

இந்த பேரணியில், தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட ஆலோசனை வழங்கும் சேவை என் 104 குறித்த பதாகைகள், மற்றும் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வல்ல, அந்த எண்ணத்தை கைவிடவேண்டும் என்ற பதாகைகளை ஏந்தி 100க்கும் அதிகமான மாணவர்கள் பேரணியாக சென்றுள்ளனர்.

 

மருத்துவ கல்லூரியில் இருந்து ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செஞ்சிலுவை சங்கம், நீதிமன்றம் சாலை வழியே மீண்டும் கல்லூரிக்கும் செல்கின்றனர். 

 

இந்த பேரணியை கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் நிர்மலா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.