கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிதிலமடைந்து காணப்படும் குனியமுத்தூர் - கோவைப்புதூர்- பேரூர் சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

கோவை - பாலக்காடு சாலையில், குனியமுத்தூரில் இருந்து குளத்துப்பாளையம், கோவைப்புதூர் பிரிவு வழியாக பேரூர் பிரதான சாலைக்கு செல்லும் வழித்தடத்தில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலை மிகவும் பழுதடைந்து வாகனத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

 

பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ள கோவைப்புதூர் சாலை.

 

இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரூ.591.14 கோடி மதிப்பில் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடைத் திட்டப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், குளத்துப்பாளையம், கோவைப்புதூர் சாலைகளில் தற்போது வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவாக முடிக்கப்படும்’’ என்றனர்.

 

மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது,‘‘பாதாள சாக்கடைத் திட்டப் பணியை விரைவில் முடிக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

 

தகவல் : இந்து தமிழ் திசை