2022ல் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.247.70 கோடி மதிப்பிலான பல ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளதாவது:

 

 

 கோவை மாநகராட்சியில் 2022ஆம் ஆண்டில், 5 மண்டலங்களிலும் 37 இடங்களில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட ரூ.247.70 கோடி மதிப்பிலான 24.28 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

அதன்படி, மத்திய மண்டலத் தில் 3 இடங்களில் ரூ.7.50 கோடி மதிப்பிலான 19 சென்ட் நிலம், கிழக்கு மண்டலத்தில் 3 இடங்களில் ரூ.31 கோடி மதிப்பிலான 1.46 ஏக்கர் நிலம், வடக்கு மண்டலத்தில் 5 இடங்களில் ரூ.3.55 கோடி மதிப்பிலான 40 சென்ட் நிலம், தெற்கு மண்டலத்தில் 11 இடங்களில் ரூ.87.85 கோடி மதிப்பிலான 9.70 ஏக்கர் நிலம், மேற்கு மண்டலத்தில் 15 இடங்களில் ரூ.117.70 கோடி மதிப்பிலான 12.51 ஏக்கர் நிலம் மீட்கப் பட்டுள்ளது.

 

 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

ஆகிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு, அவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு அலுவலர்களால் மீட்கப்பட்டு, அறிவிப்புப் பலகைகள் நடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.