கோவை சித்தாபுதூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் அண்மையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

 

இதற்காக கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது வாழை மரங்கள் ,தென்னங்கீற்று, பணவோலை ,பல வண்ண பூக்கள் அலங்காரத்துடன் காணப்பட்டது. கொண்டாட்டமானதுடன் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர் . பின்னர் பொங்கல் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவ மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. 

 

பொங்கல் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்பட்ட போட்டியில் மாணவர்களும் மாணவிகளும் சிறு சிறு குழுக்களாக இணைந்து பொங்கல் வைத்து அசத்தினர்.

 

கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கிராமிய ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது அதில் கிராம மக்களை போலவே மாணவர்கள் தோற்றமளித்தனர்.

 

 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மற்றும் டீன் டாக்டர் . P.சுகுமாரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுரியின் முதல்வர் மற்றும் செயலர் டாக்டர் . N.R.அலமேலு அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.