கோவை உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தில் படகு சவாரி 

 துவங்கப்பட்டுள்ளதுபோல, குறிச்சி குளத்திலும் படகு சவாரி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

இதுபற்றிய விவரம் பின் வருமாறு: 

 

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.52.16 கோடி மதிப்பீட்டில் குறிச்சி குளத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

டிசம்பர் 13, 2022 அன்று கோவை வந்த அப்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் அமைந்துள்ள குறிச்சி குளத்தில், படகு இல்லம் அமைப்பதற்கு, சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்று கண்டறிய கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு துறை அதிகாரிகளுடன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

இப்படியிருக்க, தற்போது குறிச்சி குளத்தில் இம்மாத இறுதிக்குள் படகு இல்லம் அமைக்கப்படும் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. 

 

என்னென்ன அம்சங்கள் குறிச்சிகுளம் அருகே அமைகிறது? - விவரம்:

 

பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் குறிச்சி குளத்தில் மிதிவண்டி பாதை, நடைப்பயிற்சி நடைபாதை, குளக்கரையில் நான்கு இடங்களில் அலங்காரவளைவுகள், பாதசாரிகள் உண்டு மகிழ குளக்கரையின் ஓரத்தில் 47 சிற்றுண்டி கடைகள் மற்றும் பல வகையான சிறு அங்காடிகள், கோவை -பொள்ளாச்சி சாலையின் மேற்புறம் நவீன வகையான வாகன நிறுத்துமிடம், இளைஞர் களுக்கான உடற்பயிற்சிக் கூடங்கள், குளத்தை சுற்றி 5.5 கி.மீ.நீளத்துக்கு வண்ணமயமான அலங்கார விளக்குகள், 4 இடங்களில் சூரிய ஒளி மின்சார தகடுகள், 36 இடங்களில் காற்றாலை கோபுரங்கள், 23 இடங்களில் பார்வையாளர் மாடங்கள், மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனக் காட்சியினை கண்டுகளிக்க ஏதுவாக சிறப்புப் பார்வையாளர் மாடம், 2 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. 

 

Image: Wikipedia