கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கும் கட்டடக்கழிவுகளை அகற்றுதல் மற்றும் மறுசுழற்சி முறையில் சிமெண்ட், செங்கல், செயற்கை மணல், டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை தயாரித்தல் பணியை மேற்கொள்ளுதல் தொடர்பான தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகராட்சி  ஆணையாளர் மு.பிரதாப் தலைமையில் இன்று நடைபெற்றது.

 

இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டதாவது:

 

 மாநகரில் தேங்கும் கட்டடக்கழிவுகளை அகற்றுதல், அவற்றை அகற்றுவதற்கு தேவையான கட்டணத்தை நிர்ணயம் செய்தல், நாள்தோறும் 100 டன் அளவிற்கு கட்டடக்கழிவுகளை அகற்றுதல், அதனை மறுசுழற்சி முறையில் சிமெண்ட், செங்கல், எம்-சேன்ட், டைல்ஸ் உள்ளிட்ட கட்டுமானப்பொருட்களை தயாரித்தல் ஆகியவைக்கான ஒப்பந்தம் வருகின்ற ஜனவரி 24ம் தேதி நடைபெறவுள்ளது.

 

 

ஒப்பந்தம் தொடர்பான கருத்துக்கேட்பு மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடனான ஆலோசனையும் இக்கூட்டத்தில் இன்று நடைபெற்றது. 

 

 

ஜனவரி 24ம் தேதி ஒப்பந்தம் கோரப்பட்ட பின்னர் பணியை எவ்வாறு செய்வது குறித்து விரிவாக தகவல்கள் தெரிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.