இந்தியாவில் அதிக வேக 5G இணையச் சேவையை பிரதமர் மோடி அக்டோபர் 2022ல் துவக்கி வைத்தார்.

 

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி,மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5G சேவை வழங்கப்பட்டு வருகிறது.

 

தற்போது தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவில் 5G சேவை தொடங்கப்படவுள்ளது.

 

 அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று புதன்கிழமை (11.01.2023) துவக்கி வைக்கிறார்.

 

புதன் கிழமை தி.நகரில் உள்ள ஜிஆர்டி கன்வென்சன் மையத்தில் மாலை 5 மணிக்கு மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார்.