சட்டசபையில் இன்று திருப்பூரில் உருவாகி வரும் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் குறித்த கேள்விக்கு பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மைதான பணிகள் 60% நிறைவு அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

 

 

 திருப்பூர் மாவட்டத்தில் 8 ஏக்கரில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது.

 

கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டு 60% பணிகள் முடிவுற்றுள்ளதாக அமைச்சர் உதயநிதி கூறினார். 

 

அங்கே டென்னிஸ், கைப்பந்து, 400 மீட்டர் ஓடுதளம், கூடைப்பந்து உள்ளிட்ட வசதிகள் அமைக்கும் பணிகளுடன் 1500 பார்வையாளர்கள் அமரும் வகையில் புதிய பார்வையாளர் மாடம் அமைக்கும் பணியும் நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்

 

வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முழு பணிகள் முடிக்கப்பட்டு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கூறினார்.