தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன்(84) நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக கடந்த 10ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

 

சிகிச்சைக்கு பின் நேற்று வீடு திரும்பிய நிலையில், இன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.