கோவை, தடாகம் ரோடு, லாலிரோடு, சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், மக்கள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை குறைப்பதற்காகவும் மாதிரி ரவுண்டானா அமைத்து சோதனை ஓட்டம் இன்று (19.01.2023) மாலை 4.00 மணிமுதல் நடைபெற்று வருகிறது.

 

 

இதனால், கௌலிபிரவுன் சாலை வழியாக மருதமலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள், உழவர் சந்தையை அடுத்த குரு கோவிந்த்சிங் சாலையில் இடதுபுறமாக திரும்பி, மேற்கு பெரியசாமி ரோடு, தடாகம் ரோடு வழியாக, லாலிரோடு ஜங்ஷனை அடைந்து அங்கு செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, பயணம் மேற்கொள்ளலாம். 

 

 

எனவே, பொது மக்கள் நலன் கருதி, மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.