கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் பேண்டிகூட் எனும் அதிநவீன இயந்திரத்தின் மூலம் பாதாள சாக்கடை  அடைப்புகளை சரி செய்யும் பணியினை ஒன்றிய சமூக நலத்துறை இணை அமைச்சர் திரு.நாராயணசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 

இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் உடன் இருந்தனர். 

 

ஆய்வுக்கு பின்னர் பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். 

 

முன்னதாக ரோஸ்கர் மேளா எனும் ஒன்றிய அரசு நிகழ்வு கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.