தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனின் துணைவியார் வசந்தி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

 

 

அவரது இறுதி வணக்க ஊர்வலம் நாளை (21/01/2023) காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

 

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

 

 

அவர் செய்தியில் கூறியதாவது:-

 

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் திரு. கோவை கு.ராமகிருட்டிணன் அவர்களின் வாழ்க்கைத் துணையர் திருமதி. வசந்தி அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.

 

இணையரை இழந்து தவிக்கும் திரு. ராமகிருட்டிணன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.