பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது அமிர்தம் போன்றது.

 

பல நேரங்களில் மருத்துவமனைகளில் குழந்தை பிரசவித்த தாய்மார்களில் சிலருக்கு உடனே தாய் பால் குழந்தைக்கு தேவையான அளவு சுரக்காது. 

 

இதனால் குழந்தைகளுக்கு தேவை படும் ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.

 

 மேலும் பிரசவத்தின் போது தாய் இறந்து விட்டால் பிறக்கும் குழந்தைக்கு தாய் பால் கிடைக்காது. 

 

 இந்த மாதிரியான நிலைமையில் குழந்தைக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தாய் பால் வங்கிகள் அரசாலும் தனியார் தொண்டு நிறுவனங்களாலும் துவங்கப்பட்ட வருகிறது. 

 

இந்நிலையில், கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற பெண் கடந்த 2022 ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் இடையிலான 7மாதங்களில் 105.9 லிட்டர் தாய்ப்பாலை அமிர்தம் அறக்கட்டளை மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக வழங்கி இருக்கிறார்.

 

இவர் ஒருவரின் தானத்தால் இதுவரை 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

 

ஶ்ரீ வித்யா தான் இந்தியா பூக் ஆப் ரெகார்ட்ஸ் எனும் சாதனை புத்தகத்தின் படி அதிகப்படியான தாய்ப்பாலை தானமாக தந்தவர் என்று அங்கீகாரம் பெற்றுள்ளார். 

 

மேலும் இவர் ஆசியா புக் ஆப் ரெக்காட்சிலும் இடம் பிடித்திருக்கிறார்.

 

 105.9 லிட்டர் உடன் நிற்காமல் ஸ்ரீவித்யா தற்போது வரை வெற்றிகரமாக 127 லிட்டர் வரை தாய்ப்பாலை தானமாக வழங்கி உள்ளார்.