16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 23ம் தேதி (நாளை) மாலை மூலவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சன்னதி திரையிட்டு மூடப்பட உள்ளது. 

 

இம்மாதம் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை மதியம் வரை மட்டுமே பக்தர்கள் மலைமீதுள்ள மூலவரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் இன்று பழனிக்கு வழக்கத்தை விட மிக கூடுதலாக பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

 

மலை மீது நீண்ட வரிசையில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

 

 

23 ஆம் தேதிக்கு பிறகு பழனிக்கு வரும் பக்தர்கள் மலை மீது சென்று யாகசாலையை வணங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.