கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஆற்றும் சேவைகளை பாராட்டும் விதத்திலும், ஊக்குவிக்கும் விதத்திலும், கோயம்புத்தூர் மாநகராட்சியில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளின் அடிப்படையில் மாமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்து, சிறந்த மாமன்ற உறுப்பினர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

இதற்கென மாமன்ற கூட்டத்திற்கு வருகை புரிதல், ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்குதல், பொது மக்களுடைய நன்மதிப்பு, வரி வசூலிப்பு பங்களிப்பு, மண்டல அளவில் அவர்களின் செயல்பாடு என பல கட்ட வகையில் அளவுகோல்களை கொண்டு அதற்கு மொத்தம் 50 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

 

தேர்வானவர்கள் விவரம்: 

 

மாமன்ற உறுப்பினர்கள் ஜி.வி. நவீன்குமார் (வார்டு 5), ஆ.ராதாகிருஷ்ணன் ( வார்டு 18), செ.சரண்யா (வார்டு 30), எம்.கே.பிரவின்ராஜ (வார்டு 42), பிரபா ரவீந்திரன் (வார்டு 48) ,எ.அன்னக்கொடி (வார்டு 49) இலக்குமி இளஞ்செல்வி (வார்டு 52), கே.செல்வராஜ் (வார்டு 72), இ.அகமது கபீர் (வார்டு 86), இரா.கார்த்திகேயன் (வார்டு 100) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். 

 

இவர்களுக்கு வரும் குடியரசு தினத்தன்று மாநகராட்சி சார்பில் இங்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.