வாரத்துக்கு 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வரும் 30-ம் தேதி திங்கள்கிழமை, 31-ம் தேதி செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. 

 

இதற்கு நடுவே குடியரசு தினத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு நாளை (26-ம் தேதி) அரசு விடுமுறை நாளாகும். 

 

வரும் சனிக்கிழமை (28-ம் தேதி) 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினமும், மறுநாள் 29-ம் தேதி ஞாயிறு என்பதாலும் வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். 

 

இடையில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (27-ம் தேதி) ஒரு நாள் மட்டும் வங்கிகள் செயல்படும்.