கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ நாகசாயி மந்திர் சாய்பாபா கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா பிப்ரவரி 1ல்  நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

  1946 நடந்த முதல் கும்பாபிஷேகம் கடந்த 2002ம் ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெற்றது. அதற்கு பின்னர் இந்த ஆண்டு தான் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. 

 

கும்பாபிஷேகத்தை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி, வித்யாதர் சர்மா ஆகியோர் நடத்தி வைக்கின்றனர். 

 

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் விழாவில் பங்கற்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.