சர்வதேச அளவில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள் விற்பனை செய்யும் ஸ்வீடன் நாட்டை மையமாக கொண்ட தனியார் நிறுவனமான IKEA (ஐ.கே.இ.ஏ) இந்தியாவில் ஹைதராபாத் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் தன்னுடைய பிரமாண்ட கிளைகளை அமைத்துள்ளது.

 

இந்த நிறுவனத்தின் பிரபல தன்மை பற்றி சொல்லவேண்டும் என்றால், அண்மையில் பெங்களூரு நாகசந்திரா பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில், 4.60 லட்சம் சதுரடியில் திறக்கப்பட்ட IKEA பர்னிச்சர் கடையில் 7000க்கும் அதிகமான வீட்டுக்குத் தேவையான பர்னிச்சர்கள் உள்ளன.

 

இங்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். சில நாட்களில் வாடிக்கையாளர்கள் 1 மணிநேரம் வரிசையில் காத்திருந்து இதன் பொருட்களை வாங்குவர். 

 

 

இப்படி இருக்க சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலக பொருளாதார மையத்தின் கூட்டத்தில் பங்குபெற்ற பிறகு இந்திய வந்த தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, IKEA நிறுவனம் இந்தியாவில் விரிவாக்கம் செய்ய கோவை மீது ஆர்வம் காட்டியதாகவும், IKEAவின் அதிகாரிகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது, இன்னும் எதும் முடிவு செய்யப்படவில்லை, விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும்..." என்று கூறியுள்ளார்.