Update: தாக்கப்பட்டது தமிழக தொழிலாளர்கள் அல்ல, தமிழக இளைஞர்கள். இது குறித்து காவல் துறை வழங்கிய புது தகவல்கள் நம் செய்தி தளத்தில் உள்ளது. முழு விவரத்தை அறிந்து கொள்ள அதை பார்க்கவும்.

 

திருப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை  தாக்கியது நேற்று சமூக வலைதளங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

 

இந்த சம்பவம் ஜனவரி 14 ம் தேதி நடைபெற்றது. 

 

 பெல்ட், கட்டை போன்ற பொருட்களை கொண்டு தமிழர்கள் துரத்தி தாக்கபடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் பரவி வருகிறது. 

 

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலம்பாளையம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

 

விசாரணையில், பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிகடையில், சிகரெட் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்னையில், தமிழ் இளைஞர்கள் வடமாநில தொழிலாளரை தாக்கியுள்ளனர். 

 

இதற்கு பதில் தாக்குதல் நடத்திய வட மாநில தொழிலாளர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தமிழ்நாட்டு இளைஞர்களை தாக்கியுள்ளனர்.  

 

 இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதற்கு பின் வேறு எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

 

சென்ற ஆண்டு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.