இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான MS தோனியின் தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் பற்றிய தகவல் இன்று வெளியானது.

 

LGM எனும் Let's Get Married என்ற பெயர் இந்த படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

 

புது எழுத்தாளரான ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்குகிறார்.  

 

இதில் நடிகர்கள் யோகி பாபு, லவ் டுடே பட நடிகை இவானா, ஹரிஷ் கல்யாண் மற்றும் நதியா ஆகியோர் நடிக்கவுள்ளனர். 

 

இதற்கு இசை அமைப்பது யார் என்று இன்னும் தகவல் இல்லை.