கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றம்!
- by David
- Jan 30,2023
Coimbatore
கோவை மாவட்டத்தின் 182வது ஆட்சித் தலைவராக 16.6.2021 அன்று பொறுப்பேற்ற டாக்டர். ஜி.எஸ். சமீரன் பனியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பெருநகர சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) கீழ் புது பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இன்று பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நமக்கு கிடைத்த தகவலின் படி டாக்டர் சமீரன் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.