டாக்டர்.எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளில் 06-01-2023 முதல் 08-01-2023 வரை பி.பி.ஜி. பிசியோதெரபி கல்லூரி நடத்தியது.

இந்த விளையாட்டு போட்டிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 32 பிசியோதெரபி கல்லூரிகள் பங்கேற்றன.

இந்த விளையாட்டு போட்டியில் எஸ்.என்.எஸ் பிசியோதெரபி கல்லூரி கோ-கோ போட்டியில் பெண்கள் அணி முதல் இடத்தையும், கையுந்துபந்து (Volley Ball) பெண்கள் அணி இரண்டாவது இடத்தையும், கபடி ஆண்கள் அணி 3வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.