கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விரைவில் வரவுள்ளது சூப்பர் திட்டம்! என்ன பெற்றோர்களே மகிழ்ச்சியா?
- by David
- Jul 18,2025
பள்ளியோ, கல்லூரியோ மதியம் 3.30 மணி முதல் 4 மணிக்குள் வழக்கமான வகுப்புகள் முடிந்ததும் மாலை நேரத்தில் எடுக்கும் குட்டி பசிக்கு பெரும்பான்மையான மாணவர்கள் சுட சுட எண்ணெயில் பொறித்த பலகாரங்களையும், உப்பு, காரம் உள்ள துரித உணவுகளை உண்ணும் வழக்கத்தை கொண்டவர்களாக உள்ளனர்.
இன்னும் சிலர் வாரம் 1-2 முறை பர்கர், ஷவர்மா, பிரைட் சிக்கன், ஃபிரெஞ்சு பிரைஸ், பீட்சா, ஐஸ் கிரீம் என பல உணவுகளை உட்கொள்ளும் வழக்கம் கொண்டர்வர்களாக இருக்கின்றனர்.
ருசியான இந்த துரித உணவுகள், மாலை நேரத்து பசியை போக்கிவிடுகிறது என்றாலும் இவை அதிக எண்ணெய், உப்பு, சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளாகவும், நாக்கு எளிதில் இவற்றுக்கு அடிமையாகும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடும் நபர்களுக்கு உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதெல்லாம் பின்நாட்களில் தானே வரும், இளம் வயது என்பது பாறையை விழுங்கினால் கூட ஜீரணம் ஆகும் வயது தானே என்று நினைத்தால் அதெலாம் அந்த காலத்து இளம் வயதினருக்கு தான் பொருந்தும். இந்த காலத்தில் உள்ள குழந்தைகள், கல்லூரி மாணவர்களில் கணிசமானோர் உடல் உழைப்பு இல்லாமல் கைக்கு அடக்கமான செல்போனில் தான் மூழ்கி உள்ளனர் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே பிரபல உணவுகளில் எவ்வளவு சர்க்கரை, உப்பு, எண்ணெய் உள்ளது என்கின்றன தகவலையும், அவற்றை உண்டால் உடலில் எப்படி விளைவுகள் ஏற்படும் என்பதையும், ஒரு தனி நபர் எவ்வளவு உப்பு, சர்க்கரை எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை பற்றிய தகவல்கள் கொண்ட போஸ்டர்கள், டிஜிட்டல் போர்டுகள் ஆகியவற்றை கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பொறுத்த உணவு பாதுகாப்பு துறை திட்டமிட்டுளளது.
அடிப்படை உணவு தரம் பற்றிய அறிவை மாணவர்களுக்கு வழங்கவும், உணவில் உள்ள கலப்படத்தை அவர்கள் கண்டறிய உள்ள வழிகளை பற்றி கூறவும் உணவு பாதுகாப்பு துறை இந்த முயற்சியை எடுத்துள்ளது. விரைவில் இந்த விழிப்புணர்வு செய்திகள் மாணவர்கள் விரும்பும் படி அவர்கள் முன்புவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போஸ்டர், டிஜிட்டல் போர்டு வைத்தால் எல்லாம் மாறிவிடுமா?
சிறு வயதில் அவர்களிடம் துரித உணவுகளால், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளால் ஏற்படும் பாதிப்பு பற்றி பேசவோ, விழிப்புணர்வு ஏற்படுத்தவோ முடிந்ததால், நிச்சயமாக அவர்களுக்கு அதுபற்றிய புரிதல் ஏற்படும். அவர்கள் வழக்கத்தில் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை பார்த்தவுடன் மாறிவிடுவார்களா? என்றால், இதை பார்க்க பார்க்க அவர்களுக்குள் ஒரு கேள்வி பிறக்கும் என்பது தான் இதற்கு பதில்.