கோயம்புத்தூர்மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பேருந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள போக்குவரத்து தீவுத்திடல்(ரவுண்டானா) பகுதியில் உழவு தொழிலையும் உழவர்களையும் போற்றும் விதமாக தனியார் பங்களிப்புடன் உழவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதை இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி திறந்துவைத்தார். அவருடன் மாநகரகாவல் ஆணையர் ரவணாசுந்தர், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நகர திட்டமிடுநர் குமார் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலரும் இதை பார்வையிட்டனர்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகே அழகிய உழவர் சிலை உதயமானது!
- by David
- Jan 10,2025