உலக முதலுதவி தினமான இன்று ( செப்டெம்பர் 10) கோவை மாவட்ட நிர்வாகத்துடன் முதலுதவி நுட்பங்களை உத்திகளை மாணவ மாணவியரிடம் கற்றுத்தரும் தன்னார்வல அமைப்பான அலர்ட், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தினுடைய திறந்தவெளி அரங்கத்தில் மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 5000 மாணவ மாணவியருக்கு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சிகளை வழங்கின.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் அலர்ட் அமைப்பின் தலைவர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு 5000 மாணவ மாணவிகளுக்கு உயிர்காக முதலுதவி பயிற்சி அளிக்கும் நிகழ்வை ஒரு உலக சாதனையாகவும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டன.