சென்னை ஐயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி.

 

 

இவரது மகன் 13 வயது சிறுவன். இவர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 

 

கோடை விடுமுறையொட்டி மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

 

 

இதனிடையே நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிறுவன்  வெளியே சென்றுள்ளார். 

 

 வெளியே சென்றவர் அதன் பின்னர் வீட்டிற்கு திரும்பாததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் சிறுவனை தேடியுள்ளனர்.

 

இருப்பினும் சிறுவன் கிடைக்காததால், சிறுவனின் தாயார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

 

 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளை பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 

 

 

அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

 

அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரணை நடத்திய போது வேடப்பட்டியில் உள்ள அந்த வேன் சவுண்ட் சர்வீஸ் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

 

தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் கடத்தி சென்றதும், வழியில் சிறுவனை ஏற்றி சென்றதும் தெரியவந்தது.

 

 

இதனிடையே சிறுவன் கண்டுபிடிக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன.