கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 22 பேர் பலியானதை அடுத்து மாநிலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை குறித்து பொதுமக்கள் வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து கோவை மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் கடத்தல், விற்பனை செய்தல், போலி மதுபானம் தயாரித்தல் போன்ற குற்றங்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கோவை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவின் 7604910581 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் பெயர், விவரம் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.