உலக நாடுகளில் பல இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் துவங்கிய நிலையில், தொற்றுக்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாநில பொது சுகாதாரத் துறையை மத்திய அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

 

இதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைகனை அதிகப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

  

 

இது தொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பு.அருணா கூறியதாவது: 

 

 

கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் காணப்படுகிறது.

 

வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதால் பரிசோதனைகளை அதிகப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதால், கொரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் ஆகியோருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வட்டார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

பருவமழை காலம் என்பதால் கொரோனா அறிகுறிகள் அதிகரித்துள்ளன. எனவே, கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.

 

இவ்வாறு கூறினார்.