கோயம்புத்தூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் சார்பில்  அடுத்த வாரம் முதல் வார இறுதி நாட்களில் All in All அங்காடி, இன்னிசை Evening,சைக்கிள் ஓட்டம், அறுசுவை Street  என பல்வேறு வகையான நிகழ்ச்சிகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இவை அனைத்திலும் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இலவசமாக்க பட்டுள்ளது.

All in All அங்காடி

உக்கடம் பெரியகுளத்தில் '"All in All அங்காடி" என்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்டு தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தவும். விற்பனை செய்யவும் விரும்பும் அனைத்து தரப்பினரும் ஸ்டால் முன்பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இந்நிகழ்ச்சியானது செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும். 

இன்னிசை Evening

வாலாங்குளத்தின் மேம்பாலத்திற்கு கீழ் பகுதியில் இசையும் தேநீருமாக "இன்னிசை Evening" என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இன்றைய அவசர உலகில் தங்களுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் நேரம் செலவிட இவ்வாய்ப்பானது இன்றியமையாதது. இந்நிகழ்ச்சியானது செப்டம்பர் 10 அன்று மாலை 5.00 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் உங்கள் இசைக்குழுவினருடன் பங்கேற்க https://forms.gle/uKb3pMbmpWCa7Mn58 என்ற லிங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Cyclothon

ஆரோக்கியமான வாழ்வின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "சைக்ளத்தான்" (Cyclothon) நிகழ்ச்சியானது செப்டம்பர் 18 ம் தேதி காலை 6.00 மணியளவில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பொதுமக்கள், தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

அறுசுவை Street

கோயம்புத்தூரில் ஒரு மாபெரும் உணவுத் திருவிழாவாக "அறுசுவை Street" உள்ளது. பாரம்பரிய மற்றும் சமகால உணவுகளை மக்களிடம் கொண்டு அமைய சேர்க்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது. 

இந்நிகழ்வில் தங்கள் உணவுகளை விற்பனை செய்ய விரும்பும் அனைத்து தரப்பினரும் ஸ்டால் முன்பதிவு செய்ய வரவேற்கப்படுகிறார்கள். முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், உங்கள் ஸ்டால்களை முன்பதிவு செய்திட 9943944223 மற்றும் 8637490177 ஆகிய கைபேசி எண்கள் வாயிலாகவும், https://forms.gle/b2ZDSVjEvYBZD2We8 என்ற தளத்திலும் முன்பதிவு செய்யலாம் என நிர்வாக இயக்குநர் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் /மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.