கொரோனா பரவல் மீண்டும் மெதுவாக உலகம் முழுவதும் அதிகரிக்க துவங்கியிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் 6,400 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

 

கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது வரை 6,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் 3,537 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளாகும். இத்துடன் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. 

 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று கோவை அரசு மருத்துவமனையிலும் கொரானா சிகிச்சைகள் வழங்கக்கூடிய அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அவசரகால ஒத்திகை நிகழ்வுகள் நடைபெற்றது.

 

அதில் கொரோனா சிகிச்சை பாதிப்பில் சிரமப்படும் நோயாளிகளை கையாளுவது, உள் நோயாளிகளை அனுமதிப்பது மற்றும் மருத்துவ உபகரணங்களை கையாளுவது போன்றவற்றிற்கான ஒத்திகைகள் நேற்று நடைபெற்றது.