நடிகர் ரஜினிகாந்தை வைத்து கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் 2ம் பாகத்தை எடுத்துவருகிறது. இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார். இதன் சில காட்சிகள் கோவை கேரளா எல்லை பகுதிகளில் படமாக்க படக்குழு திட்டமிட்டு படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறது. 

இன்று ஆனைகட்டியில் இந்த ஜெயிலர் 2 படத்திற்கான சில காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அங்கே ரசிகர் கூட்டம் ஒன்று சென்று வழக்கம் போல படப்பிடிப்புத்தளத்தில் காத்திருந்து, நடிகர் ரஜினியை பார்க்க காத்திருந்தது. நடிகர் ரஜினி அங்கு வந்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள் ஏராளமானோர் உற்சாக கூச்சலிட்டு அவர்மேல் உள்ள அன்பை காட்டினர்.

அந்த ரசிகர் படையில் ஒரு முதியவரும் இருந்தார். அவர் பிறருடன் முட்டி மோதி மூச்சுக்கு முன்னூறு முறை "தலைவா.. கடவுளே..." என்று கூச்சலிட்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் அவர் பிறருடன் வாக்குவாதம் செய்து வீடியோ எடுக்க முயன்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. ரசிகர்களுக்கு கைகாட்டி விட்டு ரஜினி அங்கிருந்து சொகுசு காரில் சென்றார்.