திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்டம் காந்திபுரம் திமுக பகுதி கழகம் சார்பில் ராம்நகரில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 67வது வட்ட கழக செயலாளர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. 



இதில் சிறப்பு விருந்தினராக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார் மேலும் இதில் மாநில சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு முனவர் ஜான் மற்றும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ஆகிய பங்கேற்றனர்.இதில் பல்வேறு திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில்  67 வது வார்டு உறுப்பினர் வித்தியா இராமநாதன், மத்திய மண்டல தலைவர் மினாலோகு, காந்திபுரம் பகுதி கழக செயலாளர் சேதுராமன் உட்பட பகுதி கழக நிர்வாகிகள்  வழக்கறிஞர் கோவை கணேஷ் குமார் இரா.பாலு, நீலக்கண்ணன் பழனிசாமி கண்ணம்மா முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.