இந்திய கடற்படையின் விமான பிரிவில் விமானத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதில்லை என்றும் அதை தயாரிப்பதில் சவால்கள் அதிகம் உள்ளதாகவும் நேற்று இந்திய கடற்படையின் துணைத்தலைவர் தீபக் பன்சல் கோவையில் உள்ள கொடிசியா டிபன்ஸ் இன்னோவேஷன் மற்றும் அட்டல் இன்குபேஷன் மையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

 

 

இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் :-

இந்திய கடற்படையின் விமான பிரிவு தன்னிறைவு பெறுவதற்காக இலக்கை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகிறது.

 

தற்போது 585 பொருட்களை தயாரிக்க இலக்குகளை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான உதிரி பாகங்கள் இலக்கை அடைய பயன்படுத்தப்படும் பாகங்கள் தயாரிக்கும் திறனுடைய நிறுவனங்களை இந்திய கடற்படை எதிர்பார்த்து வருகிறது, என அவர் கூறினார். 

 

மேலும் அவர் பேசுகையில்:-

 

விமானத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகள், இன்ஜின் போன்றவற்றை நாம் இன்னும் உள்நாட்டில் தயாரிக்கவில்லை. அவற்றை தயாரிப்பது சவால் நிறைந்ததாக உள்ளது.

 

ஆனால் அதே சமயம் இந்திய கடற்படையின் விமான பிரிவில் விமானம் அல்லாத முக்கிய பொருட்களில் 90 % உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார். 

 

 

தகவல்: இந்து தமிழ்