கோயம்புத்தூர் சாய்பாபா காலனியில் உள்ள 'லூம் வேர்ல்டு' வளாகத்தில் ஹேண்ட் லூம்ஸ் ஆப் இந்தியா (Handlooms of India) விற்பனையகம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ்-ன் புதிய விற்பனை நிலையத்தை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் இன்று திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். 



இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில் :-

 

இரண்டு ஆண்டுகளாக கைத்தறி துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. கைத்தறி துறை, நெசவாளர் முன்னேற்றத்திற்கு நம் முதல்வர் அதிக முக்கியத்துவம் வழங்கிவருகிறார். நெசவாளர் முன்னேற்றதிற்கு அனைத்து நடவடிக்கையும் இந்த அரசு எடுக்கிறது. 


கைத்தறி துணிநூல் துறை கடந்த ஆண்டு ரூ.9 கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது ரூ. 20 கோடி லாபத்துடன் இந்த துறை இயங்கி வருகின்றது.


டெக்ஸ்டைல் நிறுவனத்தின் சார்பில் 18 மில்கள் இயங்கி வந்தது. இப்போது 6 மில்கள் தான் இருக்கிறது. மற்றவை மூடப்பட்டு விட்டது என அமைச்சர் தெரிவித்தார்.  


தேசிய பஞ்சாலைக் கழக ஆலைகள் கொரோனாவுக்கு பிறகு திறக்கப்படாதது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, எனக்கே தேசிய பஞ்சாலைக் கழகம் மில்களுக்குள் அனுமதி இல்லை என்கிறார்கள் என்றார்.அப்போது பேசிய எம். எல். ஏ வானதி, தேசிய பஞ்சாலைக் கழகம் தொடர்பாக கொள்கை முடிவு எடுத்து தீர்வு காணாப்படும் என கூறினார்.