வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் மின்மோட்டார் பம்புசெட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

 

நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தியினை அதிகரிக்கவும், நிலத்தடி நீர்பாசனத்தில் மின்மோட்டார் பம்பு செட்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

 

திறன் குறைந்த மின்மோட்டார் பம்புசெட்கள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின்நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர்பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது.

 

எனவே, தமிழ்நாடு அரசு, பழையதிறன் குறைந்த பம்பு செட்களை மாற்றி அமைத்திடவும், புதிய கிணறுகளை உருவாக்கும் 5 ஏக்கருக்கு குறைவான நிலமுடைய விவசாயிகளுக்கு புதியதாக 10 குதிரைத்திறன் (HP) வரையில் உள்ள மின்மோட்டார் பம்புசெட்கள் வாங்குவதற்கு மானியமாக ரூ.15,000/- அல்லது மொத்த விலையில் 50% இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டுவருகிறது.

 

இத்திட்டமானது, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 

மேலும் இத்திட்டம் தொடர்பாக முழுவிபரங்களை பெற்று பயன் அடைய

செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகம், தடாகம்ரோடு, ஜி.சி.டி, அஞ்சல், கோயம்புத்தூர்-13 (0422-2434838), உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், தடாகம்ரோடு, ஜி.சி.டி, அஞ்சல், கோயம்புத்தூர்-13(0422- 2966500) மற்றும் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகம், ஒழுங்கு முறை விற்பனைகூட வளாகம், மீன்கரைரோடு, பொள்ளாச்சி -01(04259-292271) ஆகிய அலுவலகங்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.