கேரள மாநிலம், கண்ணூர், கர்நாடக மாநிலம் அரசிகெரே இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

 

அரசிகெரே ரயில் நிலையத்தில் இருந்து ஏப்ரல் 28 ஆம் தேதி நண்பகல் 12.15 மணிக்குப் புறப்படும் அரசிகெரே - கண்னூர் சிறப்பு ரயில் (எண்: 06205) மறுநாள் காலை 5.15 மணிக்கு கண்ணூர் நிலையத்தை சென்றடையும். 

 

ஏப்ரல் 29ஆம் தேதி, காலை 8 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூர் - அரசிகெரே சிறப்பு ரயில் (எண்: 06206) மறுநாள் காலை மணிக்கு அரசிகெரே நிலையத்தை சென்றடையும்.

 

இந்த ரயிலானது, தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

தகவல் : தினமணி