கோவை உக்கடத்தில் உள்ள மீன் மார்க்கெட் வரும் மீன்கள் 50% குறைந்துள்ளது மேலும் விலையும் 20 % வரை அதிகரித்துள்ளது என தகவல்கள் கூறுகின்றன. 


இதற்கு காரணம் என்ன?


தமிழகம் முழுவதும் உள்ள கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதங்களில் ஒரு 45 நாட்கள் மீன் பிடி தடை காலமாக இருக்கும்.


இந்த தடைக் காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் இந்த 45 நாள் தடைக்காலம் 61 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டின் தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கி வரும் ஜூன் மாதம் 14ஆம் தேதி முடிகிறது. தடைக்காலம் தொடங்கியதை அடுத்து கடலோர மாவட்டங்களில் உள்ள 3000 க்கு மேற்பட்ட விசைப்படகுகள் கடல் பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள மீன் மார்க்கெட்டுகளுக்கு வரும் மீன் வரத்துகள் குறைந்துள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து வரும் மீன்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதுவே மீன்கள் வரத்து குறைந்திருப்பதற்கு காரணமாக உள்ளது.




With inputs from TOI Samayam