கோவையில் உள்ள 3 மால்களான  'ப்ரூக்ஃபீல்டு ' , 'ஃபன் மால் '  மற்றும் ; ப்ரோ ஜோன்' ஆகிய இடங்களில் சர்ச்சைக்குரிய 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இஸ்லாமியர்கள் பற்றி சித்தரித்துள்ள முறைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

எனவே இத்திரைப்படம் திரையிடப்பட்ட வணிக வளாகங்களில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கூறியதன் விளைவாக இந்த மூன்று மால்களிலும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து துணை ஆணையர் சதீஸ் கூறுகையில்:

 

மூன்று மால்களில் பாதுகாப்பு கருதி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக பொதுமக்கள் படத்தை பார்க்க வரும்போது சோதனை இருக்கும்.  இன்று மெட்டல் டிடெக்டர் மூலமாக வரும் பொதுமக்கள் அனைவரையும் சோதனை செய்த பின்னரே மால்களில் அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் பைகள் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


இவ்வாறு அவர் கூறினார்.