பட்ஜெட் அறிவிப்புக்கு பின் மேலும் குறைந்தது தங்க விலை!
- by David
- Jul 23,2024
Business
பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னர், தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 விலை குறைந்தது. ஒரு கிராம் ரூ.6,810க்கும் ஒரு சவரன் ரூ.54,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. 18 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.104 விலை குறைந்தது. ஒரு கிராம் ரூ.5,578க்கும், சவரன் ரூ.44,624க்கும் விற்பனையானது.
பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்திற்கான கஸ்டம்ஸ் வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550க்கும் விற்பனையாகிறது.