இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாகத் தகவல் இன்று வெளியாகியுள்ளது. இதனால் இலங்கை மக்கள் கொதிப்பில் உள்ளனர் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. 

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிக்கு செல்ல காரணமாக அந்த நாட்டை அப்போதுஆண்ட ராஜபக்சே குடும்பம் தான் என்று பார்க்கப்படுகிறது.  உணவு, எரிபொருள், அணியச்செலாவணி என எல்லாமே தீர்ந்துபோனதால் நடுத்தெருவுக்கு மக்கள் இறங்கி பெரும் போராட்டத்தை பல மாதங்களாக செய்து வருகின்றனர். 


கடந்த மாதம் மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து சிங்கப்பூர், தாய்லாந்துக்கு தப்பி சென்றார். வரும் வாரம்  இலங்கை திரும்பவார் எனக் பேசப்பட்டுவந்த நிலையில் அவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்காக அவர் கிறீன் கார்ட் (Green Card) விண்ணப்பித்திருப்பதாக தகவல் உள்ளது.