கோவை உள்பட 11 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் நல்ல மலைக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

 

 

நேற்று (10.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (11.05.2023) காலை 05.30 மணி அளவில் “மோகா” புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து.

 

 

இன்று இரவு வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

 

 

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியள்ளது. 

 

கோவை,நீலகிரி, சேலம் உள்பட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.