கோவை மாநகரில் தற்போது மழை பெய்ய துவங்கிய நிலையில் இந்த மழை மாநகரில் அடுத்த 1 மணி நேரம் பெய்ய வாய்ப்புள்ளதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் கணித்துள்ளார். மேலும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலங்களின் பல இடங்களில் இன்றும் அடுத்த 4 நாட்களும் கனமழை பெய்யக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது கோவை மாநகரில் அவிநாசி சாலை, பீளமேடு, ராமநாதபுரம், கணபதி, சேரன்மாநகர், துடியலூர், வடவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம், பன்னிமடை, கவுண்டம்பாளையம், தடாகம், கணுவாய் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.