மத்திய சிவில் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு உடன் கோவை மாவட்டத்தின் மூத்த தொழில்துறை தலைவர்கள் சிலர் இன்று கலந்துரையாடியுள்ளனர்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரிக்கல் நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன்; ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சீனிவாசன்; திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்தை வேகப்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு இருந்துள்ளது, மேலும் இந்த பணிகள் துவங்கி நிறைவடையும் வரை மக்களின் தேவைகளுக்கு இடைக்கால தீர்வுகளை வழங்குவது பற்றியும் பேசப்பட்டுள்ளது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.