கோவை சரவணம்பட்டி, சிவானந்தபுரம், வேலவன் நகரில் இன்று கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார். 

 

இந்த ஆய்வின் ஒருபகுதியாக அவர் அப்பகுதியில் இணைப்பு சாலை அமைப்பது குறித்த சாத்தியகூறுகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து, சாலை அமைக்க உரிய திட்டமதிப்பீடு தயாரிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

 

மேலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படுகிறதா என கேட்டறிந்தார். 

 

அதை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும்,தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டுவருவதை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.