சில நாட்காளாக தமிழகத்திலும் புதுவையிலும் குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவது உன்னிப்பாக கவனிக்கப்பட்டுவருகிறது. 

பொதுவாகவே மழை காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இம்முறை அந்த எண்ணிக்கையில் சில மாற்றங்கள் உள்ளது. 

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவிக்கு ஒரு நாளில்  சராசரியாக 250-300 குழந்தைகள்  ஏதாவது காய்ச்சல் மற்றும் உடல் நல குறைவோடு வருவது உண்டு. தற்போது கூடுதல் 50 குழந்தைகள் சிகிச்சைக்காக வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. 

புதுவையில் அதிகமான சிறுவர் சிறுமியருக்கு காய்ச்சல் ஏற்படுவதால் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 


மருத்துவர்கள் தரப்பில் இது பற்றி கூறுவது என்னவென்றால் :-

ஆகஸ்ட் - டிசம்பர் வரை இயல்பாக காய்ச்சல் பருவமாக இருக்கும். தமிழகத்தை பொறுத்தவரை இயலபை விட சற்று அதிகமான குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டுவருகிறது. 5 நாட்கள் கூடவும் காய்ச்சல் சில குழந்தைகளிடம் இருக்கிறது. 

இதற்கு பருவ நிலை மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம், குழந்தைகள் கடந்த 2 ஆண்டுகளாக (2020,2021) இந்த பருவங்களில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து தற்போது வெளியே வருவதால் இவ்வாறு நேரலாம். இதற்கு முன்பு வரை அவர்கள் கைகழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றியதை விட தற்போது குறைவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். 

வீட்டில் உள்ள சிறு குழந்தைகள், சாப்பிட பிரியம் இல்லாமல் இருந்தாலோ, சுறுசுறுப்பில்லாமல் இருந்தாலோ, வாந்தி,உடற்சோர்வு போன்றவை இருந்தால் பெற்றோர்கள் சற்று கவனமாக இருக்கவேண்டும். 

அதற்கான அச்சம் கொள்ள தேவை இல்லை. அதே போல் அலட்சியமாகவும் இருக்கவேண்டாம். குழந்தைகளுக்கு சளி, இருமல், மூக்கடைப்பு மட்டும் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரை நாடவேண்டும்.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்பால் சிரமப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கூறினர்.