கோவையில் கோனியம்மன் தேர்த்திருவிழா ... தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்!
- by David
- Feb 28,2024
Coimbatore
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோனியம்மன் கோவிலின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மதியம் 2:30 மணி அளவில் துவங்கியது.
தேரோட்டத்தை முன்னிட்டு ராஜவீதி, டவுன் ஹால் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தேர் செல்ல கூடிய ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதற்கு நடுவே தேரோட்டத்தை கண்டு தரிசனம் செய்தனர்.
பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல் துறை சார்பில் 1000+ போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மேலும் தண்ணீர், மோர் உள்ளிட்ட குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
திருவிழாவில் கோவை அத்தர் ஜமாத் பெரிய பள்ளிவாசல் சார்பாக பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.