மத்திய பணியாளர் தேர்வாணையம் இந்த வருடத்திற்கான 933 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. 


கோவை கே.பி.ஆர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் பயிற்சி பெற்றவர்களில் 11 பேர் குடிமைப்பணி அதிகாரிகளாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த சுவாதிகா என்பவர் அகில இந்திய அளவில் 456 இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.


இவருக்கு கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிர்வாக இயக்குனர் கே.பி.டி. சிகாமணி மற்றும் பயிற்சி இயக்குனர் பழனிமுருகன் ஆகியோர் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஹரிணி, அருண், சுவாதிகா, சுஷ்மிதா, சிவப்ரகாஷ், சுப்புராஜ், பிரதீப், அஸ்வின், ஸ்ரீநாத், குடியரசு மற்றும் ராஜேஷ் ஆகியோர் கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் பயிற்சி பெற்று  IAS / IPS தேர்வுகளில்  வெற்றி பெற்றுள்ளனர். 

இதன் மூலம் குடிமைப் பணித் தேர்விற்கு கோவையிலிருந்தே பயிற்சி பெற்று வெற்றி பெறலாம் என்பதை கே.பி.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியின் தேர்ச்சி விவரங்கள் பறைசாற்றுகின்றன.