கோவை மேற்கு புறவழிச்சாலை முதல் பகுதி திட்டத்தில் 40 %க்கும் அதிகமான பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் பகுதி திட்டத்துக்கு ரூ.330 கோடியில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக அரசு நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேற்கு புறவழி சாலை திட்டம் ஆகஸ்ட் 2023ல் துவங்கியது.மொத்தம் 32.4 கிமீ. நீளம் கொண்ட இந்த புறவழிச்சாலையை 3 பகுதிகளாக அமைக்கபடுகிறது.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை முதல் பகுதி (11.80 கி.மீ) ,மாதம்பட்டி முதல் கணுவாய் முதல் இரண்டாம் பகுதி (12.10 கி.மீ), கணுவாய் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை மூன்றாம் பகுதி (8.52 கி.மீ) ஆக பிரிக்கப்பட்டு உள்ளது.

3 பகுதிகளாக அமையும் இந்த புறவழி சாலை நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் இதனால் கேரளாவில் இருந்து ஊட்டி, மைசூருக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஊட்டி வழியாகவோ அல்லது அங்கிருந்தோ கேரளா துறைமுகத்திற்கு செல்லும் சில லாரிகள் மாநகருக்குள் வர வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

முதல் பகுதி பணிகளை 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். 

படங்கள் : ரகுபதி