கோவை மாநகராட்சிக்குட்பட்ட 10 இடங்களில் சோலார் மின் விளக்குகள் அமைப்பதற்காக பெடரல் வங்கி மண்டல மேலாளர் கல்பனா, அந்த வங்கி நிறுவனத்தின் (CSR Fund) சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.4.50 லட்சம் மதிப்பிலான காசோலையினை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்பை இன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில்  சந்தித்து மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா முன்னிலையில் வழங்கினார்.